

மோசமான வானிலை காரணமாக ஆர்ஜென்டீனா கால்பந்து நட்சத்திர வீரா் லயோனல் மெஸ்ஸியின் தில்லி வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மிகுந்த எதிா்பாா்ப்புக்கு மத்தியில் 3 நாள்கள் பயணமாக மெஸ்ஸி கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா வருகை தந்தார். முதல் நாளில் கொல்கத்தாவிலும், ஹைதராபாத்திலும் நேற்று மும்பையிலும் ரசிகர்கள் முன் தோன்றி மகிழ்வித்தார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இறுதியாக மெஸ்ஸி இன்று தலைநகர் தில்லிக்கு வருகை தரவுள்ளார்.
ஆனால் தில்லியில் நிலவி வரும் கடும் மூடுபனி காரணமாக அவரது சார்டர் விமானம் தாமதமடைந்துள்ளது. தற்போது மெஸ்ஸி மும்பை விமான நிலையத்தில் உள்ளார். விரைவில் அவர் இறுதிநிகழ்ச்சிகளுக்காக தில்லி புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரை வரவேற்க தில்லி விமான நிலையம் முன் ஏராளமான ரசிகர்கள் கூடியுள்ளனர்.
மெஸ்ஸியின் நிகழ்ச்சி தில்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று (டிச.15) பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அருண் ஜேட்லி மைதானத்தில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.