

தில்லியில், கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் 100-க்கும் அதிகமான விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் நிலவி வரும் கடுமையான பனிமூட்டத்தால் உருவான மோசமான தெரிவுநிலையால் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (டிச. 16) விமானப் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், சில விமானங்களின் பயணங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன.
தில்லி விமான நிலையத்துக்கு வரவிருந்த 77 விமானங்கள் மற்றும் அங்கிருந்து புறப்பட வேண்டிய 49 விமானங்களின் பயணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, வானிலை சீரடைந்து வருவதால், சில விமானங்கள் மட்டும் இயக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த, தகவல்களைப் பெறுவதற்கு பயணிகள் அவர்களது விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, தலைநகர் தில்லியில் காற்றுமாசுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.