

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக இன்று (டிச. 16) இஸ்ரேல் சென்றடைந்துள்ளார்.
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேலில் 2 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கின்றார். இதனைத் தொடர்ந்து, அபுதாபியில் இருந்து இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு அவர் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் வெளியுறவு அமைச்சர் கிடியோர் சார் ஆகியோருடன் இருநாடுகள் இடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இஸ்ரேலின் சுற்றுலா அமைச்சர் ஹயிம் காட்ஸ், பொருளாதாரம் மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் நிர் பார்கட், நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் நிகழாண்டில் (2025) அரசு முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவார் எனக் கூறப்படும் நிலையில், அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லியில் கடும் பனிமூட்டம்! 126 விமானங்களின் போக்குவரத்து பாதிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.