

சத்தீஸ்கரில், மூத்த தலைவர்கள் உள்பட 11 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாராயணப்பூர் மாவட்டத்தில், கூட்டாக ரூ.37 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 5 பெண்கள் உள்பட 11 மாவோயிஸ்டுகள் காவல் துறை உயர் அதிகாரி ராபின்சன் குடியா முன்னிலையில் இன்று (டிச. 17) சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சரணடைந்துள்ள மாவோயிஸ்ட் குழுவில் தலா ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த மூக்கிய தலைவர்களான போட வட்டே (எ) பீமா, நமேஷ் மண்டவி (எ) திலீப், சோமரி மண்டாவி (எ) ரீட்டா மற்றும் சியாராம் சலாம் (எ) ஆகாஷ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சரணடைந்த மாவோயிஸ்டுகளுக்கு அரசின் திட்டத்தின்படி ஊக்கத்தொகையான ரூ.50,000 காசோலை வழங்கியதுடன், அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
முன்னதாக, நிகழாண்டில் (2025) நாராயணப்பூர் மாவட்டத்தில் மட்டும் 298 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், வரும் 2026 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள மாவோயிஸ்டுகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காதலியுடன் நேரம் செலவிட விடுப்பு கேட்ட ஊழியர்! மேலதிகாரியின் பதில் என்ன தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.