

100 நாள் வேலைத் திட்டம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (எம்ஜிஎன்ஆா்இஜி) திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயா் நீக்கப்பட்டதற்காக, எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், இந்த திட்டத்துக்கு முழு நிதியும் மத்திய அரசு அளித்து வந்த நிலையில், தற்போது புதிய மசோதாவில் 40 சதவீதம் மாநில அரசுகள் நிதி அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
மக்களவையில் இந்த மசோதா குறித்து இரண்டாம் நாளாக இன்றும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்ற வாய்ப்புள்ளதால், காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி அலுவலகத்தில் அனைத்து எம்பிக்களும் இன்று காலை ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.