காந்தி பெயர் மாற்ற விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு மாற்றான வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த இரண்டு நாள்களாக இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணி நடத்தினர்.
அப்போது மத்திய அரசின் பெயர் மாற்ற நடவடிக்கைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி, முழக்கங்களை எழுப்பினர். இந்த பேரணியில், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய கார்கே, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது தொடர்பான பிரச்னை அல்ல, வேலைக்கான உரிமை பற்றியது.
இது மிகப்பெரிய பிரச்னை, ஏழைகளுக்கு கடினமானது. இதற்காக இறுதிவரை போராடுவோம். ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும், தெருக்களிலும் இயக்கமாக நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.