

நாட்டில் 5,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் சேர்க்கைகூட இல்லாமல் இருப்பதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 10.13 லட்சம் அரசுப் பள்ளிகளில் 5,149 பள்ளிகளில் ஒரு மாணவர் சேர்க்கைகூட இல்லை என நாடாளுமன்றத்தில் கல்வித் துறை தரவுகள் கூறுகின்றன. 2024 - 25 கல்வியாண்டு தரவறிக்கையின்படி, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில்தான் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானவை.
இருப்பினும், இந்தப் பள்ளிகளில் அதிகப்படியான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
2022 -23 கல்வியாண்டில் 10 மாணவர்கள் அல்லது மாணவர்களே இல்லாத அரசுப் பள்ளிகளில் 1.26 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போதைய 2025 - 26 கல்வியாண்டில் 1.44 லட்சமாக ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.