

பிகார் மாநிலத்தில், குளிர் அலைகள் தொடர்ந்து வீசி வருவதால் 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில், குளிரின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றது. இதனால், பல்வேறு முக்கிய நகரங்களில் பனிமூட்டம் ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து மிகவும் அபாயகரமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் பிகாரின் 12 வட மாவட்டங்களுக்கு குளிர் அலைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும், பாட்னா உள்ளிட்ட மீதமுள்ள சுமார் 24 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதில், மேற்கு சம்பாரன், கிழக்கு சம்பாரன், சீதாமர்ஹி, ஷியோஹர், மதுபானி, தார்பங்கா, முசாபர்பூர், சமஸ்திபூர், வைஷாலி, சரண், சிவன் மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் டிச.22 ஆம் தேதி வரையில் குளிர் அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காலை மற்றும் இரவு நேரங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் பிகார் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அவர்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.