

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) நிறுவனா் லாலு பிரசாத் யாதவிற்கு தலைநகர் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண்புரை மற்றும் விழித்திரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கண் மருத்துவமனைகளுக்கான மையக் குழுமத்தின் தலைவரும் மருத்துவ இயக்குநருமான மருத்துவர் மஹிபால் சிங் மேற்பார்வையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. லாலு பிரசாத் யாதவ் திட்டமிட்ட கண்புரை மற்றும் விழித்திரை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அது வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அவர் சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைத்தார் என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் மேம்பட்ட கண் மருத்துவ நுட்பங்களைப் பயன்படுத்தி சிக்கல்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் ஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மருத்துவக் குழு மற்றும் நலம் விரும்பிகளின் பிரார்த்தனைகளுக்கு நன்றி என்று அவரது மகள் பாரதி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். 77 வயதான லாலு யாதவ் தற்போது கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.