

உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு உக்ரைனின் ஒடெசா நகரத்தில், அமைந்துள்ள துறைமுகக் கட்டமைப்பின் மீது நேற்று (டிச. 19) இரவு ரஷிய ராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில், 8 பேர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளதாக, ஒடெசா நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்து ரஷிய ராணுவம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், உக்ரைன் ராணுவத்தின் போக்குவரத்து மற்றும் சேமிப்பு கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக, ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரஷியாவின் போர் கப்பல், எண்ணெய் கட்டமைப்புகளின் மீது நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக, உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றும் வரும் இந்தப் போரில், ரஷியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் அதன் ராணுவ தளவாடங்களுக்கு உதவுவதாகக் கூறி பலமுறை அவற்றின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.