

ரஷியாவில், இந்திய மருத்துவ மாணவர் ஒருவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தைச் சேர்ந்த கௌரவ் சிங் நாக் (வயது 21), அவரது சகோதரியுடன் ரஷியாவின் வேலிகி நோவ்கோரோட் நகரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரில் கடந்த 3 ஆண்டுகளாக எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த டிச.10 ஆம் தேதி அன்று வெளியே சென்ற கௌரவ் மாயமாகியுள்ளார். மேலும், அவரது செல்போன் உள்ளிட்ட பொருள்களை விடுதி அறையில் வைத்துவிட்டு, வங்கி அட்டையை மட்டும் கௌரவ் எடுத்துச் சென்றதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 10 நாள்களாகியும் இதுவரை கௌரவ் வீடு திரும்பாததால் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு அவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என கௌரவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்துடன், கௌரவ் ரஷிய ராணுவத்தில் கட்டாயத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்டாரா எனும் சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்பு ஸ்கேனர்: இந்தியன் வங்கி ரூ.38 லட்சம் நன்கொடை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.