

ஹைதராபாத்தில் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை சமந்தா ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடிகை சமந்தா கடை திறப்பு நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டார். அப்போது அங்கு அவரைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் கூடினர்.
மேலும் சிலர் சமந்தாவுடன் புகைப்படம் எடுக்க முயன்றதால் ரசிகர்களின் கூட்டத்தில் அவர் சிக்கிக்கொண்டார்.
பின்னர் சமந்தாவை பாதுகாவர்கள் மீட்டு பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். தற்போது இந்த விடியோ வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடிகை நிதி அகர்வால் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டதோடு ஒருசிலர் அத்துமீறிய செயலிலும் ஈடுபட்டனர்.
இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.