2025-ல் வெளியான திரைப்படங்களில் பல படங்களின் டிரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில் அதிக பார்வைகளைப் பெற்ற டிரைலர்கள் என உச்ச நட்சத்திரங்களின் படங்களே.
அதிலும், நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் 3.9 கோடி பார்வைகளைப் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் டிரைலர் 3.5 கோடி பார்வைகளையும் நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி டிரைலர் 2.8 கோடி பார்வைகளையும் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கின்றன.
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ (2.4 கோடி) நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் (2.1 கோடி) ஆகியவை 4 ஆம் மற்றும் 5 ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.
இந்தியளவில் தமிழ் சினிமாவுக்கும் பெரிய வணிக கவனங்கள் இருந்தாலும் 2025-ல் எந்த திரைப்படத்தின் டீசரும் டிரைலரும் 50 மில்லியன் (5 கோடி) பார்வைகளைப் பெறாததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.