

இரட்டை என்ஜின் அரசு இருக்கும்போது பிரதமர் மோடி வெறும் வெற்று முழக்கங்களை விட, தீர்வுகளைப் பற்றிப் பேச வேண்டும் எனக் காங்கிரஸ் எம்பி சுக்தேவ் பகத் கூறினார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் எம்பி,
பிரதமரின் வரலாற்று அறிவு அவருக்கு மட்டுமே புரியும். கிழக்கு நோக்கிய கொள்கை, வெள்ளச் சூழல் மற்றும் அதற்கான நிரந்தரத் தீர்வுகள், அதிகரித்துவரும் வேலையின்மைப் பிரச்னை போன்ற முக்கியப் பிரச்னைகள் குறித்து பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார் எனக் கேள்வி எழுப்பினார.
அஸ்ஸாமின் முக்கியப் பிரமுகரான ஜூபின் கார்க் குறித்தோ, வங்கதேசத்தில் நடந்த முக்கிய சம்பவம் குறித்தோ பிரதமர் மோடி குறிப்பிடாதது குறித்தும் காங்கிரஸ் எம்பி விமர்சித்தார். பழங்குடியினரின் நிலங்கள் மற்று அவற்றின் நிரந்தர நிலை குறித்து பிரதமர் மௌனமாக இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஜிலா பரிஷத் உறுப்பினர் மற்றும் கிராம பரிஷத் உறுப்பினர் தேர்தல்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அருணாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அருணாச்சலப் பிரதேச மக்கள் நல்லாட்சிக்கான அரசியலுக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்குகிறார்கள். பாஜக மீது அவர்கள் காட்டிய பாசத்திற்கு அருணாச்சலப் பிரதேச மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இது மாநிலத்தின் மாற்றத்திற்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எங்கள் உறுதியை வலுப்படுத்துகிறது. மக்களிடையே அயராது உழைத்த பாஜக தொண்டர்களை நான் பாராட்டுகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிக்க: திமுக தேர்தல் அறிக்கை: கனிமொழி தலைமையில் முதல் கூட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.