திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளதையடுத்து திமுக 2 ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதில் தேர்தல் வாக்குறுதிகள் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுக எம்.பி.யும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று(டிச. 22) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, கோவி செழியன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.