ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூ. 1 லட்சத்துக்கு ஆணுறை வாங்கிய சென்னை வாடிக்கையாளர்!

ரூ. 1 லட்சத்துக்கு ஆணுறை (கான்டம்) வாங்கிய சென்னை வாடிக்கையாளர்: ஆன்லைன் ஷாப்பிங்கில் வெளிவராத அதிர்ச்சித் தகவல்கள்!
ஆணுறை (கான்டம்)
ஆணுறை (கான்டம்)Center-Center-Kochi
Updated on
1 min read

ரூ. 1 லட்சத்துக்கு ஆணுறை :

ஆன்லைன் ஷாப்பிங்கில் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் ரூ. 1 லட்சத்துக்கு ஆணுறை வாங்கியிருப்பது அதிர்ச்சித் தகவல் வெளியாகி சமூக ஊடகத் தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

‘ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்’ ஆன்லைன் வர்த்தக நிறுவன தளத்தின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2025இல் இந்திய வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கிய பொருள்கள், இந்தியர்களின் ஷாப்பிங் அனுபவம் உள்பட பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்தத் தளத்தில் பொருள்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் நுகர்வு விவரங்களை ஆய்வு செய்ததில், சராசரியாக 127 ஆர்டர்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பப் பட்டியலில் ஆணுறை நீங்கா இடம் பிடித்திருக்கிறதாம்! அதிலும் குறிப்பாக, ஆணுறை விற்பனை உச்சத்தை தொட்டது கடந்த செப்டம்பரில். அந்த மாதத்தில் மட்டும் ஆணுறை விற்பனை 24 சதவிகிதம் ஏற்றம் கண்டிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025-இல், சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கிலிருந்து ரூ. 1 லட்சத்துக்கு ஆணுறை (கான்டம்) வாங்கப்பட்டிருக்கிறதாம். அந்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து, ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் 228 முறை ஆணுறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது (சராசரியாக ஒரு மாதத்துக்கு 19 முறை ஆணுறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது) குறிப்பிடத்தக்கது. அதன்மூலம், இந்தத் தளத்துக்கு அவர் செலுத்திய கட்டணம் ரூ. 1,06,398 ஆகும்.

பெங்களூரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், பொருள்களை கொண்டு சேர்க்கும் ஊழியர்களுக்கு இந்த ஓராண்டில் டிப்ஸ் ஆக மட்டும் ரூ. 68,600 செலவழித்திருக்கிறாராம் (பாராட்டுகள்..!).

2025-இன் ‘காதலர் நாள்’ கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, பிப். 14-இல் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 668 என்ற விகிதத்தில் ரோஜா மலர்கள் ஆர்டர் செய்யப்பட்டு விற்பனை படுஜோராக நடைபெற்றிருக்கிறதாம்.

ஆணுறை (கான்டம்)
ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!
Summary

Rs 1 Lakh for Condoms! A Chennai User Placed Swiggy Instamart Orders for Condoms - As Per 2025 Year-Ender

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com