ஒடிசாவில் 22 மாவோயிஸ்டுகள் சரண்! ஆயுதங்கள் ஒப்படைப்பு!

ஒடிசாவில் 22 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளது குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஒடிசா மாநிலத்தில், 22 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடன் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

மல்கன்கிரி மாவட்டத்தில், 22 மாவோயிஸ்டுகள் ஒடிசாவின் காவல் துறை டிஜிபி யொய்.பி. குர்ரானியா முன்னிலையில் இன்று (டிச. 23) சரணடைந்துள்ளனர். மேலும், அவர்கள் தங்களது ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளில் சிலர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் ஒடிசாவின் வனப் பகுதிகளில் இயங்கி வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சரணடைந்த மாவோயிஸ்டுகள் 9 துப்பாக்கிகள், 20 கிலோ வெடிபொருள்கள், 13 ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இத்துடன், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளின் மறுவாழ்விற்கான அனைத்தும் உதவிகளும் அரசு தரப்பில் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

முன்னதாக, சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை, கடந்த நவ.27 ஆம் தேதி உயர்த்தி ஒடிசா அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம், ஒடிசாவில் வழங்கப்படும் உதவித் தொகையானது சத்தீஸ்கரில் வழங்கப்படுவதை விட 10 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சத்தீஸ்கரில் பாஜக தலைவர் வெட்டிக் கொலை!

Summary

In the state of Odisha, 22 Maoists have surrendered to the security forces with their weapons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com