பிரதமர் மோடியின் இல்லத்தில் தடகள வீரர் நீரஜ் சோப்ரா!

பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் தடகள வீரர் நீரஜ் சோப்ரா சந்தித்து உரையாடியுள்ளார்...
பிரதமர் மோடியுடன் தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர்
பிரதமர் மோடியுடன் தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர்எக்ஸ்/PMModi
Updated on
1 min read

தில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

தில்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லமான லோக் கல்யாண் மார்க்கில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற தடகள ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் அவரை இன்று (டிச. 23) நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில், நாட்டின் விளையாட்டுத் துறை குறித்த முக்கிய விவகாரங்களைப் பற்றி இருவரும் உரையாடியதாக, பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் அவருக்கு, இந்த கௌரவப் பதவியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பல்கலையுடன் இணையும் எஸ்எஸ்என் கல்லூரி! இனி என்னவாகும்?

Summary

In Delhi, athlete Neeraj Chopra and his wife Himani Mor met and interacted with Prime Minister Narendra Modi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com