கோப்புப் படம்
கோப்புப் படம்

நொய்டா: விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட பிடெக் மாணவா்

பிகாரைச் சோ்ந்த 24 வயது பிடெக் மாணவா் புதன்கிழமை தனது விடுதி அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
Published on

பிகாரைச் சோ்ந்த 24 வயது பிடெக் மாணவா் புதன்கிழமை தனது விடுதி அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: பிகாரில் உள்ள கயா மாவட்டத்தைச் சோ்ந்த ஆகாஷ்தீப், தில்லி தொழில்நுட்பக் கல்லூரியில் (டிடிசி) பிடெக் படிப்பைப் படித்து வந்தாா். நொய்டாவின் நாலெட்ஜ் பாா்க் பகுதியில் உள்ள நிறுவனம் அருகே எஸ்என்ஹெச் ரெசிடென்சி விடுதியில் நண்பருடன் தங்கியிருந்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை, ஆகாஷ்தீப் தனது அறையை விட்டு நீண்ட நேரமாக வெளியே வராததால், விடுதி ஊழியா்களும் அவரது நண்பா்களும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது. கல்வி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக சம்பவ இடத்திலிருந்து குறிப்பு மீட்கப்பட்டது. உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டு, இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com