

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
புனரமைக்கப்பட்ட விநியோகத் துறைத் திட்டத்தின் சோதனை ஒட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் மேலும் 83 பகுதிகளில் 24 மணி நேரம் மின் விநியோகத்தின் கீழ் வெற்றிகரமாகக் கொண்டு வந்ததற்காக காஷ்மீர் மின் விநியோகக் கழகத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இதன் மூலம், ஸ்ரீநகரில் உள்ள 108 பகுதிகள் இப்போது 24 மணி நேரமும் தடையற்ற மின்சார விநியோகத்தைப் பெறுகின்றன. இதனால் 1.25 லட்சம் குடும்பங்கள், அதாவது நகரத்தின் கிட்டத்தட்ட 48 சதவிகிதம் பேர் பயனடைந்துள்ளன.
24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக மற்ற மாவட்டங்களிலும் இதே போன்ற மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
ஜூலை 2024-ல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஆர்டிஎஸ்எஸ் திட்டமானது, மின் விநியோகப் பயன்பாடு நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனையும், நிதி நிலைத்தன்மையும் மேம்படுத்துதல், தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைத்தல் மற்றும் நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகரில் காஷ்மீர் மின் விநியோகக் கழகம் மற்றும் பிற முகமைகளால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் மின் இழப்புகளைக் குறைப்பதற்கும், விரிவான உள் கட்டமைப்பு மேம்பாடுகள், ஸ்மார் மீட்டர்களை நிறுவுதல் ஆகியவை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.