

அசாமில் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்களை அடித்து நொறுக்கிய விவகாரத்தில், விஎச்பி மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு, நாட்டின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அசாமின் நல்பாரி மாவட்டத்தில் பானிகான் பகுதியில் உள்ள செயின்ட் மேரி பள்ளியின் வளாகத்தில் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு குடில்கள் உள்ளிட்ட அலாகாரப் பொருள்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, நேற்று (டிச.24) இரவு பள்ளியின் வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்த விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் அங்கு வைக்கப்பட்டிருந்த அலகாரப் பொருள்களை அடித்து நொறுக்கினர்.
அப்போது, அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம்’, 'ஜெய் ஹிந்து ராஷ்டிரா', 'பாரத் மாதா கி ஜெய்' என முழக்கமிட்டும் அராஜகத்தில் ஈடுபட்ட விடியோக்கள் இணையத்தில் வெளியாகின.
இதனால், பெரும் பரபரப்பான சூழல் உருவான நிலையில், அந்தப் பள்ளியின் முதல்வர் பைஜூ செபாஸ்டியன் அளித்த புகாரின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்ட விஎச்பி மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த 4 பேரைக் காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இத்துடன், கைது செய்யப்பட்டவர்களின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பத்தினால், கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகவும் வேதனையுடனும், பாதுகாப்பற்ற நிலையிலும் கொண்டாடியதாக, அசாமின் கிறிஸ்துவ மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.