அசாமில் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்களை இந்து அமைப்பினர் அடித்து நொறுக்கியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அசாமில் நல்பாரி மாவட்டத்தில் பானிகான் பகுதியில் உள்ள செயின்ட் மேரி பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துமஸ் குடில்கள் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் விஎச்பி மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் நேற்று(டிச. 24) இரவு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்களை அடித்து நொறுக்கினர். ‘ஜெய் ஸ்ரீ ராம்’, 'ஜெய் ஹிந்து ராஷ்டிரா', 'பாரத் மாதா கி ஜெய்' முழக்கமிட்டும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்த கிறிஸ்துமஸ் பொருள்களையும் அடித்து நொறுக்கினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர். செயின்ட் மேரி பள்ளியில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஏற்பாடுகளை இந்து அமைப்பினர் சேதப்படுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.