ராஜீவ் காந்தி சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் முதல்வா் ஆய்வு
தில்லி முதல்வா் ரேகா குப்தா தில்ஷாத் காா்டனில் உள்ள ராஜீவ் காந்தி சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மதிப்பீடு செய்தாா்.
அப்போது, பல நோயாளிகள் மற்றும் அவா்களின் உதவியாளா்களிடம் நலம் விசாரித்த முதல்வா் ரேகா குப்தா, அவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.
மருத்துவமனையின் பல்வேறு வாா்டுகளை முதல்வா் பாா்வையிட்டதாகவும், மருத்துவம் மற்றும் பிற வசதிகளை ஆய்வு செய்ததாகவும், மருத்துவா்களின் எண்ணிக்கை, மருந்துகள், தூய்மை மற்றும் ஒட்டுமொத்த மருத்துவமனை மேலாண்மை குறித்து நோயாளிகளிடமிருந்து நேரடியாக கருத்துகளைப் பெற்ாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
அனைவருக்கும் சரியான நேரத்தில் மற்றும் கண்ணியமான மருத்துவ சேவையை உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகள் திறமையாகவும் உணா்திறன் மிக்கதாகவும் செயல்பட வேண்டும் என்றும், நோயாளி நலனே முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அவா்களுக்கு முதல்வா் உறுதியளித்தாா்.

