திரிபுரா பேரவைத் தலைவர் காலமானார்!

திரிபுரா பேரவைத் தலைவர் பிஸ்வா பந்து சென் வெள்ளிக்கிழமை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
பிஸ்வா பந்து சென்
பிஸ்வா பந்து சென் (Photo | PTI, FILE)
Updated on
1 min read

திரிபுரா பேரவைத் தலைவர் பிஸ்வா பந்து சென் வெள்ளிக்கிழமை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

திரிபுரா பேரவைத் தலைவர் பிஸ்வா பந்து சென் பெருமூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. சென்னுக்கு வயது 72. அவர், வடக்கு திரிபுராவில் உள்ள தர்மநகர் பேரவைத் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆவார். மறைந்த சென்னுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

பேரவைத் தலைவர் பிஸ்வா பந்து சென் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு, திரிபுராவின் முன்னேற்றத்தை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்தார்.

சென்னின் உடல் சனிக்கிழமை திரிபுராவுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் கூறினர். பேரவைத் தலைவர் சென்னின் மறைவுக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Summary

Tripura Assembly Speaker Biswa Bandhu Sen died at a private hospital in Bengaluru on Friday, officials said here.

பிஸ்வா பந்து சென்
நூறு நாள் வேலைத் திட்ட மாற்றம் தேர்தலில் தலையாய பிரச்னையாக இருக்கும்: ப. சிதம்பரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com