மு.க. ஸ்டாலினை உருது அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள்! - கோபமடைந்த மெஹபூபா முஃப்தி

செய்தியாளர்கள் சந்திப்பின்போது மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தி கோபமடைந்தது பற்றி...
Ask Stalin to speak in Urdu or English: Mehbooba Mufti snaps at journalist
மு.க. ஸ்டாலின் | மெஹபூபா முஃப்தி
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் செய்தியாளர் சந்திப்பின்போது உருது மொழியில் பேசக் கூறிய பத்திரிகையாளரிடம் பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி கோபமடைந்தார்.

ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரான மெஹபூபா முஃப்தி நேற்று(வெள்ளிக்கிழமை) ஸ்ரீநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார்.

செய்தியாளர்கள் முன்பு அவர் காஷ்மீரி மொழியில் பேசத் தொடங்கியபோது உருது மொழியில் பேசுமாறு பத்திரிகையாளர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

இதனால் கடும் கோபமடைந்த முஃப்தி, "உங்களுக்கு மொழிபெயர்ப்பு வேண்டுமா? ஏன்? நீங்கள் வேண்டுமெனில் மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ஆங்கிலத்திலோ அல்லது உருதுவிலோ பேசச் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?

தாய்மொழிக்கு மரியாதை அளிக்க கற்றுக்கொள்ளுங்கள். காஷ்மீரி மொழிக்கும் மரியாதை அளியுங்கள்" என்று கோபமடைந்தார்.

மேலும், வங்கதேசத்தில் 2 இந்து இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து, நாட்டில் சகிப்புத் தன்மையற்ற நிலை அதிகரித்து வருவதாகவும் வங்கதேசத்தின் நிலை மிகவும் கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார். ஜம்மு -காஷ்மீர் அரசு, தனது அமைச்சரவைக் குழுவை அங்கு அனுப்பி வங்கதேசத்தில் வாழும் காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Summary

Ask Stalin to speak in Urdu or English: Mehbooba Mufti snaps at journalist

Ask Stalin to speak in Urdu or English: Mehbooba Mufti snaps at journalist
2025 அறிமுகம்: எஸ்ஐஆர் புதிய நடைமுறையா? சாதகமா, பாதகமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com