

மத்தியப் பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தில் டெட்டனேட்டர்கள் எடுத்துச் சென்றபோது வெடித்ததில் இளைஞர் பலியானார்.
மத்தியப் பிரதேசத்தின் சேஹோர் மாவட்டத்தில், இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை டெட்டனேட்டர்கள் எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது அது வெடித்ததில் அந்த இளைஞர் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
ராம்நகர் பகுதியில் இருசக்கர வாகனம் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுக்ராம் பாரேலா(20) என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், கிணறுகளில் வெடி வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் வேலைக்காக அதிக அளவில் டெட்டனேட்டர்களை எடுத்துச் சென்றபோது, அது வெடித்ததாக துணைக் காவல் கண்காணிப்பாளர் ரோஷன் ஜெயின் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.