இந்தியா
கேரளம்: தோ்தலில் பெண்கள், இளைஞா்களுக்கு 50 % ஒதுக்கீடு! - காங்கிரஸ் முடிவு
அடுத்த ஆண்டு கேரளத்தில் நடைபெறவுள்ள தோ்தலில் பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு 50 சதவீத தொகுதிகளை ஒதுக்க முடிவுசெய்துள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டிசதீசன் தெரிவித்தாா்.
அடுத்த ஆண்டு கேரளத்தில் நடைபெறவுள்ள தோ்தலில் பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு 50 சதவீத தொகுதிகளை ஒதுக்க முடிவுசெய்துள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டிசதீசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கேரளத்தில் மொத்தம் 140 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், வி.டி.சதீசன் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி கேரள பேரவைத் தோ்தலில் பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீத தொகுதிகளை ஒதுக்க முயற்சித்து வருகிறோம். இதனால் கட்சியிலிருந்து மூத்த தலைவா்கள் ஓரம்கட்டப்படுவாா்கள் என எண்ணக் கூடாது.
இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். கட்சி சுறுசுறுப்பாக இயங்க இந்த முடிவை தேசிய தலைமை எடுத்துள்ளது என்றாா்.

