ஜெய்ப்பூர்: கல்லூரி தேர்வில் காப்பி அடித்து சிக்கிய மாணவர் 12ஆவது மாடியில் இருந்து குதித்து பலி

ஜெய்ப்பூரில் கல்லூரி தேர்வில் காப்பி அடித்து சிக்கிய மாணவர் 12ஆவது மாடியில் இருந்து குதித்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
IANS
IANS
Updated on
1 min read

ஜெய்ப்பூரில் கல்லூரி தேர்வில் காப்பி அடித்து சிக்கிய மாணவர் 12ஆவது மாடியில் இருந்து குதித்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த பிரியான்ஷு ராஜ் என்ற மாணவர் விடுதியில் தங்கி மணிப்பால் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் முதல் ஆண்டு படித்து வந்தார். தேர்வின் போது காப்பி அடித்து பிரியான்ஷு பிடிபட்டுள்ளார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் மாணவர் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து கல்லூரியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது பை மற்றும் மொபைல் போனை 12ஆவது மாடியில் உள்ள சுவரில் வைத்துவிட்டு பிரியான்ஷு குதித்துள்ளார்.

பலத்த சத்தம் கேட்டதும், தொழிலாளி விழுந்துவிட்டதாக நினைத்து, அந்த இடத்தில் இருந்த தொழிலாளர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மாணவர் அருகிலிருந்த பக்ரு சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக போலீஸார் கூறினர்.

கட்டடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​12ஆவது மாடியில் இருந்து மாணவரின் பை மற்றும் மொபைல் போனை போலீஸார் மீட்டனர். அந்தப் பையில் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், விஷம் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை இருந்ததாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

சனிக்கிழமை பக்ரு பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் மேலும கூறினர். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Summary

A 19-year-old college student here allegedly jumped off from the 12th floor of an under-construction building after he was caught cheating in an exam, police said on Sunday.

IANS
ம.பி.: இருசக்கர வாகனத்தில் டெட்டனேட்டர்கள் எடுத்துச் சென்றபோது வெடித்ததில் இளைஞர் பலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com