சிக்கிம்: உ.பி.யைச் சேர்ந்த மலையேற்ற வீரர் பலி

சிக்கிமில் மலையேற்றப் பாதையில் மலையேற்ற வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on
1 min read

சிக்கிமில் மலையேற்றப் பாதையில் மலையேற்ற வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் குமார் திவாரி(45) தனது இரண்டு நண்பர்களுடன் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட காங்க்செண்ட்சோங்கா தேசிய பூங்காவில் கோசலா மலையேற்றப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார்.

வியாழக்கிழமை மலையேற்றப் பயணத்தை முடித்துவிட்டு மேலே ஏறிக்கொண்டிருந்தபோது, கொக்சுரோங் முகாமின் அருகே திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

பக்கவாதம் போன்ற அறிகுறிகளை அவருக்கு காட்டியதாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சக மலையேற்ற வீரர்கள் மற்றும் வழிகாட்டிகள் அவருக்கு முதலுதவி அளித்தனர். உள்ளூர்வாசிகள் மற்றும் பிற மலையேற்ற வீரர்களின் உதவியுடன், அவர் யூக்சோம் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் பெடாங் முகாம் அருகே 12,100 அடி உயரத்தில் பலியானார் என்று அவர் மேலும் கூறினார்.

பிறகு அவரது உடல் வெள்ளிக்கிழமை கியால்ஷிங் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.

உடற்கூராய்வுக்கு பிறகு, உடல் சனிக்கிழமை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மறைந்த திவாரிக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

2025 ஆம் ஆண்டில் கோசலா பாதையில் ஏற்பட்ட மூன்றாவது பலி இதுவாகும்.

Summary

A 45-year-old man from Uttar Pradesh has died at the popular Goechala trekking route in Sikkim, police said.

கோப்புப்படம்.
பிகாரில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com