சல்மான் கான் படத்துக்கு சீனாவில் எதிர்ப்பு..! இந்தியாவில் வரவேற்பு!

நடிகர் சல்மான் கானின் புதிய படத்தின் மீதான சர்ச்சை குறித்து...
Salman Khan in the film Battle of Galwan.
பேட்டில் ஆஃப் தி கல்வான் படத்தில் சல்மான் கான். படம்: யூடியூப் / சல்மான் கான் ஃபிலிம்ஸ்.
Updated on
1 min read

நடிகர் சல்மான் கானின் புதிய படமான ‘பேட்டில் ஆஃப் தி கல்வான்’ டீசர் சமீபத்தில் வெளியாது.

இந்த டீசரை சீன ஊடங்கள் கடுமையாக கிண்டல் செய்து விமர்சித்துள்ளது இந்தியாவில் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ வீரா்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

இந்த மோதலில் எத்தனை சீன வீரா்கள் பலியாகினா் என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை. இது கடந்த 50 ஆண்டுகளில் இந்திய, சீன எல்லைக் கோட்டுப் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினா் இடையே நடைபெற்ற மோசமான மோதல் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சல்மான் கானின் ‘பேட்டில் ஆஃப் தி கல்வான்’ டிரைலர் கடந்த டிச.27ஆம் தேதி வெளியானது.

சல்மான் தயாரித்து நடித்துள்ள இந்தப் படத்தினை அபூர்வா லக்கியா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சல்மான் கர்னல் பி. சந்தோஷ் பாபுவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் சித்ராங்கதா சிங், அன்குர் பாட்டியா, விபின் பரத்வாஜ் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் டீசருக்கு, “வரலாறு கீழே விழும்போது, பாலிவுட் வருகிறது” எனவும் “உண்மையைத் திரித்து பொய்யான கதையை பரப்புகிறார்கள்” எனவும், “எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்தது இந்தியாதான்” எனவும், “கட்டையை வைத்தா சண்டையிடுவார்?” எனவும் சீன சமூக வலைதளத்தில் கிண்டலும் விமர்சனமும் வருவதாக சீன ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் இந்த விமர்சனத்துக்கு எதிராக, எக்ஸ் தளத்தில் இந்திய ரசிகர்கள் இந்தப் படத்துக்கு ஆதரவு அளியுங்கள் என படத்தின் பெயரை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com