பிரியங்கா காந்தி மகனுக்கு காதலியுடன் நிச்சயதார்த்தம்! மணப்பெண் யார்?

பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வதேராவின் நிச்சயதார்த்தம் பற்றி...
ரைஹான் மற்றும் அவிவா
ரைஹான் மற்றும் அவிவாPhoto: Instagram / Aviva Baig
Updated on
1 min read

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் வதேராவுக்கு, அவரது காதலியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூரில் நாளை (டிச. 31) பிரம்மாண்ட விழாவுக்கு இருவீட்டாரும் ஏற்பாடு செய்துள்ளதாக ஆங்கில ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் மகன் ரைஹான் வதேரா (வயது 25), ஆவணப் புகைப்படக் கலைஞராக இருக்கிறார்.

ஏபிஆர்இ ஆர்ட் ஹவுஸ் என்ற வலைதளத்தில் அவர் எடுக்கும் புகைப்படங்களை ஆவணம் செய்து வருகிறார். அதில், வனவிலங்கு, தெருப் படங்களும் அடங்கும். வணிக ரீதியிலான புகைப்படங்களையும் எடுத்து வருகிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு, புது தில்லியில் உள்ள பிகானேர் ஹவுஸில் படைப்புச் சுதந்திரத்தை மையப்படுத்திய புகைப்படக் கண்காட்சியை ரைஹான் நடத்தினார். அதே ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற தி இந்தியா ஸ்டோரி கண்காட்சியில் தனது படைப்புகளை காட்சிப்படுத்தினார்.

ரைஹான் அரசியலுக்கு வரவுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், அவரது திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக அவிவா பைக் என்பவரை ரைஹான் காதலித்து வந்த நிலையில், இருவரின் குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் நேற்று இருவீட்டார் கலந்துகொண்ட சிறிய நிகழ்வில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், ராஜஸ்தானில் நாளை மிக பிரம்மாண்ட நிகழ்வுக்கு இருவீட்டாரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் ரைஹானின் மாமாவுமான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா மற்றும் குடும்பத்தினர் சாலை வழியாக தில்லியில் இருந்து ரந்தம்பூருக்கு சென்றுள்ளனர்.

யார் இந்த அவிவா பைக்?

தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் இம்ரான் பைக் மற்றும் கட்டட உள் வடிவமைப்பாளர் நந்திதா பைக் ஆகியோரின் மகள் அவிவா பைக்.

தில்லியில் பள்ளி படிப்பை முடித்த அவிவா, ஊடகத் தொடர்பு மற்றும் இதழியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவரும் கட்டட உள் வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும், அவிவாவின் இன்ஸ்டாகிராம் பக்க சுயவிவரத்தில் (பயோ), சமூகப் பிரச்னைகளில் கவனம் செலுத்துபவர் என்றும், நேர்மறையான மாற்றத்தை உருவாக்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவிவா, தேசிய அளவிலான முன்னாள் கால்பந்து வீராங்கனை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், இருவரின் நிச்சயதார்த்தம் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Priyanka Gandhi's son Raihan Vadra gets engaged to his girlfriend: Who is the bride?

ரைஹான் மற்றும் அவிவா
முதல் பெண் பிரதமர்... 17 ஆண்டு சிறை.. கொல்லப்பட்ட பிரதமர் மனைவி.. யார் இந்த கலீதா ஜியா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com