

தில்லியில் செவ்வாய்க்கிழமை அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில நாள்களாக அடர் பனிமூட்டம் மற்றும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக தில்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதன்காரணமாக, தில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 60 விமானங்களும், வருகை தரவிருந்த 58 விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், 16 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
தில்லி மட்டுமின்றி ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.