

ஜப்பானை பின்னுக்குத்தள்ளி, உலகின் 4 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.
இதே வேகத்தில் சென்றால், 2030ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியை முந்தும் நிலையை இந்தியா எட்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2025 : இந்தியாவின் வளர்ச்சியை வரையறுக்கும் ஆண்டு என்ற தலைப்பில் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.18 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. இந்த சீரான வளர்ச்சியில் சென்றால், அடுத்த 2.5 முதல் 3 ஆண்டுகளில் ஜெர்மனியை இந்தியா முந்தலாம். 2030ஆம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி 7.3 டிரில்லியன் டாலராக இருக்கும்.
கடந்த ஆறு காலாண்டை ஒப்பிடும்போது ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 8.2% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7.8% ஆக இருந்தது.
சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்தியாவின் மீள்தன்மையை இது காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் முதல் பொருளாதார நாடாக அமெரிக்காவும் அதற்கு அடுத்தபடியாக சீனாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.