

புத்தாண்டு பரிசாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள முதியோர்களுக்கு ஒருநாள் முன்னதாகவே ஓய்வூதியம் விநியோகித்து வருவதாக அந்த மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பயனாளிகளுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையிலும், அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 31-ஆம் தேதியே ஓய்வூதியங்கள் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
புத்தாண்டை முன்னிட்டு மாநில அரசின் என்டிஆர் பரோசா சமூக ஓய்வூதியங்களை ஒருநாள் முன்னதாகவே விநியோகித்து வருகிறது.
டிசம்பர் மாதத்திற்காக சுமார் 63 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க மாநில அரசு ரூ. 2,700 கோடிக்கு மேல் நிதி விடுவித்துள்ளது. மேலும், தனது அரசு அமைக்கப்பட்டதிலிருந்து ஓய்வூதியங்களுக்காக ரூ. 50,000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஓய்வூதிய விநியோகம் ஏழைகளுக்கு நிதிப் பாதுகாப்பை அளிக்கிறது, இது அரசுக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. வீடு தேடிச் சென்று ஓய்வூதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.