ஜனநாயகப் போரில் வெற்றிதரும் புத்தாண்டு 2026! மு.க. ஸ்டாலின் வாழ்த்து

அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என முதல்வர் பதிவு.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
Updated on
1 min read

ஜனநாயகப் போர்க்களத்தில் வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக 2026 மலர்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளதாவது,

உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!

புத்தாண்டுத் தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!’ எனக் கோலமிட்டு திராவிடப் பொங்கல் களைகட்டட்டும்!

உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

image-fallback
புத்தாண்டு கொண்டாட்டம்: அவிநாசி மேம்பாலத்தில் இரவு 9 மணிக்குமேல் போக்குவரத்துக்குத் தடை
Summary

New Year 2026 bring victory in the democratic struggle M.K. Stalin's greetings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com