

அயோத்தியில் பிராணப் பிரதிஷ்டையின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, ராமர் கோயிலில் நடைபெறும் சடங்குகளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டாமாண்டு விழாவையடுத்து கோயில் வளாகத்தில் மத சடங்குகள் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுவரும் கோயிலில் கடந்த 2024 ஜனவரி 22-ம் தேதி மூலவர் பால ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிலையில், ிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டாமாண்டு நிறைவு விழாவையடுத்து இன்று காலை கணபதி பூஜை மற்றும் மண்டல பூஜையுடன் சடங்குகள் தொடங்கியதாகக் கோயில் அறங்காவலர் அனில் மிஸ்ரா கூறினார்.
இதுதொடர்பாக அறங்காவலர் அனில் மிஸ்ரா கூறுகையில்,
ராமர் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டாமாண்டு விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஸ்ரீராமம் கோயிலில் நடைபெறும் பிராண பிரதிஷ்டா-துவாதசி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ராஜ்நாத் சிங் முன்னிலையில் ஸ்ரீ மூல ராமருக்குச் சடங்குகள் அபிஷேகம் செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து ஆரத்தி பூஜையும் நடைபெற்றது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கோயில் வளாகத்தின் வெளியேறும் வாயிலுக்கு அருகிலுள்ள அங்கத் திலாவில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுவார்கள் என்று மிஸ்ரா கூறினார்.
இந்த விழாவில் கலந்துகொள்ள அயோத்தியைச் சேர்ந்த சுமார் 1,200 துறவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
எக்ஸ் சமூக வலைத்தளத்தில் யோகி ஆதித்யநாத் பதிவில்,
இந்த நிகழ்வை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். ராம் லல்லா சிலையின் பிராணப் பிரதிஷ்டையின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்கத் தருணத்தை அயோத்தி கண்டுள்ளது.
ஸ்ரீ ராமர் ஜென்மபூமியில் ஸ்ரீ ராமர் நிறுவப்பட்டது பல நூற்றாண்டுக்கால போராட்டங்கள் மற்றும் துன்பங்களின் முடிவைக் குறிக்கிறது. இந்தத் தருணம் பல தசாப்த கால பக்தியின் உச்சம், துறவிகளின் ஆசிர்வாதம் மற்றும் 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பு. இந்த நேரத்தில் ராமர் பக்தர்கள் ஒவ்வொருவரும் மனநிறைவுடன் இருப்பதாக அவர் கூறினார்.
கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள ஏழு கோயில்களில் ஒன்றான அன்னபூர்ணா கோயிலில் ராஜ்நாத் சிங் கொடியேற்றுவார் என்று அயோத்தி மாவட்ட ஆட்சியர் நிகில் திக்காராம் ஃபுண்டே முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.