180 கி.மீ. வேகத்திலும் சிந்தாத நீர்! அமைச்சர் பகிர்ந்த வந்தே பாரத் ரயில் விடியோ!

வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சென்றாலும் குவளை நீர் சிந்தாமல் இருப்பது குறித்து..
வந்தே பாரத் ரயில் / அமைச்சர் பகிர்ந்த விடியோவிலிருந்து
வந்தே பாரத் ரயில் / அமைச்சர் பகிர்ந்த விடியோவிலிருந்து படம் - எக்ஸ்
Updated on
1 min read

வந்தே பாரத் ரயில் 180 கி.மீ. வேகத்தில் சென்றபோதும், குவளையில் வைக்கப்பட்டிருந்த நீர் சிந்தாமல் இருப்பதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா முதல் நக்ரா இடையிலான வழித்தடத்தில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இந்த நீர் சோதனை, புதிய தலைமுறை ரயிலின் தொழில்நுட்ப அம்சங்களை நிரூபிக்கும் வகையில் உள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.

வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிடையே இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே சமீபத்தில் அறிவித்திருந்தது.

ரயில்வே பயணக் கட்டணங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தம் டிசம்பர் 26 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், ரயிலின் சிறந்த அனுபவத்தை விளக்கும் வகையில் புதிய விடியோவை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.

வந்தே பாரத் ரயில் / அமைச்சர் பகிர்ந்த விடியோவிலிருந்து
ஜப்பானை பின்னுக்குத்தள்ளியது இந்தியா! உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு!
Summary

Vande Bharat train trial run even at a speed of 180 km/h

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com