
பட்ஜெட் உரையுடன் நிர்மலா சீதாராமன்.
PTI

பட்ஜெட் உரையுடன் நிர்மலா சீதாராமன்.
PTI
2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
மக்களவையில் இன்னும் சற்றுநேரத்தில் நிதிநிலை அறிக்கைதாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார்.
இன்னும் சில நிமிடங்களில் மக்களவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றவுள்ளார்.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8-ஆவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...