
மகாராஷ்டிரத்தில் காவலர்களுக்கு துப்பு கொடுப்பவர் எனக் கூறி ஒருவரை மாவோயிஸ்டுகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிர மாநிலம், தெற்கு கட்சிரோலியில் உள்ள பம்ரகத் தெஹ்சில், கியர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாவோயிஸ்டுகளால் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து கட்சிரோலி காவல் கண்காணிப்பாளர் நீலோத்பால் கூறுகையில், உடலின் அருகே கண்டெடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், காவலர்களுக்கு அவர் துப்பு கொடுப்பவர் என்று மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெங்குண்டா போன்ற புதிய முகாம்களைத் திறக்க காவலர்களுக்கு அவர் உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது இந்த ஆண்டின் முதல் பொதுமக்கள் படுகொலை என உறுதிசெய்த அவர், கட்சிரோலி காவல்துறையினரால் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.