இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கும்பமேளா: 62 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வசந்த பஞ்சமி புனித நீராடல்

கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமியை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 62.25 லட்ச பக்தர்கள் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
கும்பமேளா
Updated On :3 பிப்ரவரி 2025, 4:03 am

DIN

கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமியை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 62.25 லட்ச பக்தர்கள் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இத்துடன் கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிகோடி பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். இதனிடையே வசந்த பஞ்சமியின் முக்கிய நீராடல் விழாவையொட்டி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட திங்கள்கிழமை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.

பௌஷ பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவா்.

இந்த 6 நாள்களிலும் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா். இந்தச் சூழலில், வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

கூட்டத்தினரை ஒழுங்குபடுத்த மேளா பகுதியின் அனைத்து இடங்களிலும் கூடுதல் துணை ராணுவப் படையினா் மற்றும் காவலா்கள் குவிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.