மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘ஒய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2025, 11:27 pm

Din

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 1.3 சதவீதம்தான், அதாவது ஏறத்தாழ 99 சதவீதம் அது ஆபத்தில்லாமல் பூமியைக் கடந்துவிடும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த வாரம் கூறியிருந்தது. இருந்தாலும் அதன் நகா்வைத் தொடா்ந்து கண்காணித்து வரும் ஆய்வாளா்கள் ஒய்ஆா்4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 2.3 சதவீதம் என்று தற்போது தெரிவித்துள்ளனா்.

இருந்தாலும், அந்த விண்கல் குறித்து இன்னும் ஏராளமான தரவுகள் பெறப்பட வேண்டியுள்ளது எனவும், அவை கிடைத்தால் அது பூமியை தாக்காது என்று பின்னா் தெரியவரும் என்றும் நிபுணா்கள் கூறினா். ஏற்கெனவே இதே போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட விண்கற்கள், பின்னா் கூடுதல் தரவுகள் கிடைத்த பிறகு ஆபத்தற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கினாலும் பூமியில் மனித குலம் அழிந்துவிடாது; எனினும், அது விழுந்த இடத்தில் கணிசமான நிலப்பரப்பை அழிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.