தில்லி முதல்வர் யார்? அமித் ஷாவுடன் நட்டா சந்திப்பு!
தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா இன்று (பிப். 9) நேரில் சந்தித்தார். தில்லியின் புதிய முதல்வரைத் தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில், பாஜக 48 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமையவுள்ளது.
எனினும் தில்லி முதல்வர் யார் என்பது குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
முதல்வர் போட்டியில் அரவிந்த கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங், மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்கரி ஸ்வராஜ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோர் உள்ளனர்.
பாஜக வெற்றியைக் கொண்டாடும் வகையில் தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர்கள் நேற்று இரவு குவிந்தனர். இதில் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தில்லி பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களும் இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் இன்று நேரில் சந்தித்து ஆலோசித்தார். இதில் தில்லி முதல்வரைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பாஜக விரைவில் அதன் எம்எல்ஏ க்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய முதல்வரைத் தேர்வு செய்யவுள்ளது. இதன் பிறகு முதல்வர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.