குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

4 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய கல்யாணராமன் கைது!

பெண்களே உஷார்! இளம்பெண்களை காமப் பசிக்கு இரையாக்கிவிட்டு தலைமறைவு...

News image
- தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
Updated On :11 பிப்ரவரி 2025, 12:44 pm

DIN

இன்றைய இளைஞர்கள் பலர் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தவிக்கும் சூழலில், கேரளத்தைச் சேர்ந்தவொரு வாலிபர் இளம்பெண்கள் நால்வரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

தான் 4 பெண்களை மணம்புரிந்திருப்பதை தன்னுடைய 4 மனைவிகளுக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டு படுசாமர்த்தியமாக மணவாழ்க்கை(களை) நடத்தி வந்துள்ளார் காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குன்று பகுதியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் தீபு திலீப்.

அதில் சுவாரசியம் என்னவென்றால்... இவர் கடைசியாக திருமணம் செய்துகொண்டுள்ள பெண்ணின் ஃபேஸ்புக்(முகநூல்) தோழியாக இருப்பவர், அன்னாரது இரண்டாவது மனைவியாவார்.

இந்த நிலையில், அவரது கடைசி மனைவிக்கு தனது கணவனை பற்றி இரண்டாவது மனைவி மூலம் தெரியவரவே தலையில் இடி இறங்கியது. அதனைத்தொடர்ந்து, காலம் தாழ்த்தாமல் உடனடியாக தனது மோசடிக்காரர் கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Story image

வெள்ளரிக்குன்று பகுதியைச் சேர்ந்தவொரு இளம்பெண்ணை கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார் தீபு திலீப். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவி மூலம் இரு குழந்தைகளுக்கு தந்தையான பின், தனது மனைவியிடமிருந்து தங்க நகைகளையும் பணத்தையும் சுருட்டிக்கொண்டு குடும்பத்தை விட்டுப்பிரிந்து மாயமாகிவிட்டார் திலீப்.

அதுவும் தனியாக அல்ல.. காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து, அவரையும் அழைத்துக்கொண்டு தமிழகத்தில் அடைக்கலம் தேடி ஜோடியாக புறப்பட்டு வந்துவிட்டனர் திலீப்பும் அவரது இரண்டாவது மனைவியும்.

Story image

இரண்டாவது மனைவியோடும் வாழ்க்கை புளித்துப்போகவே, அவரையும் விட்டுப்பிரிந்து எர்ணாகுளத்தில் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளார் திலீப். அங்கு ஒரு பெண்ணுடன் பழகி அவரையும் மணம்புரிந்து குடும்பம் நடத்தியுள்ளார். அதுவும் கொஞ்சகாலத்துக்குத்தான்...

அதன்பின், ஆலப்புழையைச் சேர்ந்த பெண்ணுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவரையே தனது நான்காவது மனைவியாக்கிக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண்மணி அளித்துள்ள பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன்னிடம் அறிமுகமாகும் இளம்பெண்களிடம், தான் ஒரு அநாதை என்றே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பழகுவது இவரது பழக்கவழக்கமாக இருந்து வந்துள்ளது. இதை நம்பி ஏமாறும் பெண்கள், அவர் மீது இரக்கப்பட்டு பாசமழை பொழிவதை தனக்கு சாதகமாக்கி, அவர்களை தனது காமப்பசிக்கு இரையாக்கிவிட்டு அதன்பின் வேறு ஊர்களுக்கு இடம்பெயர்வதே இவரது பாணி...

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த தீபுவை நேற்று(பிப். 10) அதிகாலை 2 மணியளவில் பத்தனம்திட்டையில் கைது செய்துள்ள கொன்னி காவல் துறையினர், இதுபோல பிற பெண்கள் யாரேனும் அவரால் ஏமாற்றப்பட்டுள்ளனரா? என்ற கோணத்தில் தீபுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களே உஷார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.