மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன.

திரிவேணி சங்கமத்தில் வியாழக்கிழமை புனித நீராடிய மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா.









