
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான் தனது குடும்பத்தினருடன் நீராடினார்.
உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனர்.
மகா கும்பமேளாவில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.
பிப்.26 மகா சிவராத்திரி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் புனித நீராடினர்.
இந்த நிலையில் மகா கும்பமேளாவில் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சிராக் பஸ்வான், திரிவேணி சங்கமத்தில் தனது குடும்பத்தினருடன் நீராடினார்.
சிராக் பஸ்வான், பாஜக கூட்டணியில் உள்ள பிகாரின் லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.