கேரளத்தில் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.


பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டுக்கு அருகில் உள்ள செவிலியர்களின் உடை மாற்றும் அறையில் அதிகாலை 3.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
உடனே, அருகில் உள்ள வார்டுகளில் இருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்து சில நிமிடங்களில் தீயை அணைத்தனர்.
அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில், திடீர் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...