ஜவுளித் துறையில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
தில்லியில் பாரத் மண்டபத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தொழில் வளர்ச்சி கவுன்சில்கள் இணைந்து நடத்தும் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, ``பாரத் டெக்ஸ் இப்போது உலகளாவிய ஒரு மெகா ஜவுளியாக வளர்ந்து வருகிறது. உலகின் ஆறாவது பெரிய ஜவுளி ஏற்றுமதியாளராக நாம் இருக்கிறோம். தொழில்நுட்ப ஜவுளித் துறையில் இந்தியா தனது திறனை பயன்படுத்தி, ஏராளமான வாய்ப்புகள் உருவாக்குகிறது. கடின உழைப்பு மற்றும் நிலையான கொள்கையே நமது வெற்றிக்கு காரணம்.
2025 ஆம் ஆண்டில், பருத்தி சாகுபடி செய்யும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பருத்தி உற்பத்தித் திறன் இயக்கத்தை அரசு அறிவித்தது.
கடந்தாண்டில் இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிகள் 7 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளன. இந்தியாவில் தற்போது ரூ. 3 லட்சம் கோடியை எட்டியுள்ள ஜவுளி ஏற்றுமதி, 2030 ஆம் ஆண்டில் ரூ. 9 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான்: எடப்பாடி பழனிசாமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.