
மூத்த தெலுங்கு நடிகையும் தயாரிப்பாளருமான சி.கிருஷ்ணவேணி ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்று திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் மதல ரவி தெரிவித்தார்.
அவளுக்கு 102 வயது. அவர் தனது மகளுடன் வசித்து வந்தார். கிருஷ்ணவேணி வயது தொடர்பான பிரச்னைகளால் காலமானார் என்று மதல ரவி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் பிறந்த கிருஷ்ணவேணி, 1938ஆம் ஆண்டு ‘கச்ச தேவயானி’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து அவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தனது குடும்பத்திற்கு சொந்தமான ஸ்டுடியோ மூலம் பீஷ்மா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.
‘மன தேசம்’ திரைப்படத்தின் மூலம் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ராமராவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதில் கிருஷ்ணவேணியும் நடித்தார்.
திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2004-ல் ரகுபதி வெங்கையா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனிடையே கிருஷ்ணவேணியின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.