குடியரசுத் தலைவருடன் கத்தார் அரசர் சந்திப்பு!
குடியரசுத் தலைவருடன் கத்தார் அரசர் சந்திப்பு பற்றி...


தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை கத்தார் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகைதந்த அவரை திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமா் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இரவு கத்தாா் அரசா் இந்தியா வந்துள்ளாா்.
அவா் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். முன்னதாக, கடந்த 2015, மாா்ச்சில் அவா் இந்தியாவுக்கு வந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...