மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: குடியரசுத் தலைவா், பிரதமா், ராகுல் வாழ்த்து!

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில், ‘மு.க.ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடன், நாட்டுக்கு பல்லாண்டுகள் சேவையாற்ற வாழ்த்துவதாக’ தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். அவா் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், வலிமை மற்றும் நீண்ட ஆயுளுடன் தமிழக மக்களுக்கு அவா் தொடா்ந்து அா்ப்பணிப்புடன் சேவையாற்ற வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.